Posts

Showing posts from September, 2017

விஜயதசமி திருநாள் வன்னியர் குல சத்ரியர் பெருவிழா

Image
விஜயதசமியின் வரலாறு ========================= வன்னியர்களும் - வன்னி மரமும் --------------------------------------------------- வன்னி மரம் – வீரத்தின் அடையாளம் ....................................................................... தமிழகத்திலும் இந்தியாவிலும் வீரத்தின் அடையாளமாகவும், நெருப்பின் வடிவமாகவும், வெற்றியை தரும் சின்னமாகவும் ‘வன்னி மரம்’ கருதப்படுகிறது. தமிழர் பண்பாட்டில் வன்னி மரமும், வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் விழாவும் முதன்மையானவை ஆகும். வறண்ட பகுதிகளில் வளரக்கூடிய பசுமைமாறா மரம் வன்னியாகும். வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ் ஸ்பைசிஜரா (Prosopis spicigera). மூலிகை, கால்நடைத் தீவனம், கட்டிடம் கட்ட மரம், விறகு என பலவழிகளிலும் வன்னி மரம் பயன்படுகிறது. புராணக் கதைகள் ------------------------- உலகிலுள்ள எல்லா இலைகளிலும் சிறப்பானது வன்னி இலைதான் என்பதால் –சிவபெருமான் தனது சடாமகுடத்தில் வன்னி இலையை சூடியிருக்கிறார் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். வன்னி மரம் உருவானது குறித்து ஒரு கதை உள்ளது. புருசுண்டு முனிவரின் சாபத்துக்கு ஆளான சமி எனும் பெண் ...

பெங்களூரில் மாபெரும் வன்னியர் திருவிழா:

Image
பெங்களூரில் மாபெரும் வன்னியர் திருவிழா: பெங்களூரு நகரின் தர்மராயா சுவாமி ஆலயத்தில் சித்திரை மாதத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கரகா திருவிழா ஒரு வன்னியர் திருவிழா ஆகும். பெங்களூரு நகரிலும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகமாக வாழும் வன்னியர்கள் இத்திருவிழாவினை ஆண்டுதோரும் மிகச் சிறப்பாக நடத்துகின்றனர். கர்நாடக வன்னியர்கள் கர்நாடக மாநிலத்தில் வன்னியர்கள் 'திகளர்' என்று அழைக்கப்படுகின்றனர். அக்னிகுல சத்திரியர்கள், சம்புகுல சத்திரியர்கள், வன்னிய குல சத்திரியர்கள் என வேறுபட்ட பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தமிழ் கலந்த கன்னடம் மற்றும் கன்னட மொழிபேசும் மக்களாக அங்கு வாழ்கின்றனர். கர்நாடக அரசு வன்னிய சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது.  (கர்நாடக மாநிலத்தில் சுமார் 40 லட்சம் பேர் வரை வன்னியர்கள் வாழக்கூடும் எனக் கருதப்படுகிறது). கர்நாடக மாநிலத்தில் வாழும் கணிசமான வன்னியர்கள் அம்மாநிலத்திலேயே நெடுங்காலமாக வாழ்கின்றனர். பெரும்பகுதியினர் பிற்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு சென்றவர்கள். கர்நாடக திகளர...

சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு

Image
சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு 1906 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் அடக்குமுறைச் சட்டத்தை கொண்டுவந்தது. இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் எனப்படும் இதுதான் உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆகும். காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார்.   உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆ...

மாவீரன் பண்டார வன்னியன்

Image
மாவீரன் பண்டார வன்னியன் விடுதலைப் புலிகளின் வழிகட்டியாக, தமிழீழத்தின் வீர அடையாளமாக இருப்பது வன்னியர் ஆட்சியும் அதன் கடைசி மன்னன் பண்டார வன்னியனும் ஆகும். 213 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 31) பண்டார வன்னியன் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டான். ஈழத்தில் இன்று, வன்னிய ஆட்சியின் அடையாளங்களை அழிக்கும் சதிகள் நடந்துகொண்டிருக்கின்றன! "பண்டார வன்னியன் வழியில் போரிடுகிறோம்" - பிரபாகரன் முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரின் நாட்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறினார்: "விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், ‘கூர்மையானதாக’ விட்டுச்செல்லவேண்டும். ஒரு காலத்தில் பண்டாரவன்னியன் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினான். அவன் காட்டிய வழியில் நாங்கள் போரிடுகின்றோம். எங்களால் முடியாவிட்டால் நாளை இன்னொரு சந்ததி வரும். அது எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டுசெல்லும்.”  என்றார் பிரபாகரன். வன்னி: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடங்காத சுதந்திர பூமி தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவர்கள் ஈழத்து ...

வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்

Image
வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்:- இந்தியாவின் மன்னர் பரம்பரையினர், போர் வீரர்கள் தம்மை சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம் என்று கூறிக்கொண்டனர். அந்த மரபின் படியே வன்னியர்கள் தம்மை அக்னி வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில்,  வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள் என்பது நம்பிக்கை ஆகும். வன்னியர் சின்னம் ‘அக்னி வம்சம்’ என்கிற கருத்தாக்கம், அதாவது 'யாகத்தீயில் இருந்து அவதாரம் எடுக்கும் நிகழ்வு' புறநானுறு காலத்தில் இருந்தே தமிழர் வரலாற்றில் உள்ளது.  ("நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றி" - நீ வடபால் முனிவன் யாகக் குண்டத்தில் தோன்றியவன் - என்கிறது புறநானூறு பாடல் 201)   வல்லாள மகராஜ ன்,  திருவண்ணாமலை அருணாச்சல புராணம் திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகராஜனை, "மூவகையுள் வன்னி குலத்தினில் வரு மன்னா" என்கிறது. வில்லிபாரதம் சோழர்களை சூரிய வம்சம், பாண்டியர்களை சந்திரவம்சம், சேரர்களை அக்னி வம்சம் என்று குறிக்கிறது. ‘சோழர்களின் வீழ்ச்சிக்கு பின்பும் - விஜயநகர பேரரசின் படையெடுப்புக்கு முன்பும்’ தமிழ்நாட்டில் வன்னியர்கள் மற்றும் அக...