மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம்
மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம்
வன்னி என்றதும் எம் இயதக் கதவுகளைத் தட்டித் திறப்பது வீரம்.
ஒல்லாந்தர்
கோட்டைகளை வென்று, வாட்கொடி ஏற்றி,
எந்த ஏகாதிபத்திற்கும் அடிபணியாது பீரங்கிகளுக்கெதிராக.
வாட்களை ஏந்திப் போராடி வீர மரணமடைந்த மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம்,
அவன் தன் மறவைக் கேட்டு நஞ்சை உண்டு மடிந்த காதலி குருவிச்சி நாச்சியின் வீரம்
அறுவர் சேர்ந்து ஆண்ட வன்னி வள நாட்டை அவர்கள்
அறுவரும் தமிழ் நாட்டிற்கு தலயாத்திரை
சென்ற போது,
கைப்பற்றப் போர்தொடுத்த அரசனிற்கு எதிராக அவ்
அறுவர்
துணவியரும் பணிப்பெண் ஒருவருமாக எழுவரும்
ஆண்வேடமிட்டு போர்கோலம் ப10ண்டு களம்
சென்று
சமராடிய வீரம் என்பது போன்ற வரலாறுகளைக்
கொண்டிருக்கும் வன்னி மண் தன்னகத்தே பல்லாயிரம்
ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகளைக் சொல்லக்கூடிய பல
பொக்கிஷங்களையும் கொண்டுள்ளது என்பது
யாவருக்கும்
தெரிந்திருக்க நியாயம் இல்லை.
எனவே
யாவரும் அவற்றைத்தெரிந்து கொள்வதன்
மூலம் இனிவரும் காலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு
முற்பட்ட வரலாறுகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்
என்ற அவாவிலேயே இக் கட்டுரையை எழுத
விழைந்துள்ளேன்.
வன்னி மண்ணில் நாம் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு
காலடிக்கும் கண்ணி வெடிகளும் தோட்டாக்களுமே
பதில் சொல்லிக் கொண்டிருக்கும்.
இன்றைய நிலையில் இக் கட்டுரை தேவையான
என நீங்கள் கேட்கலாம். இன்றைய சூழ்நிலையில்
இத்தகைய
ஆய்வுகள் சாத்தியப்படாத ஒன்றாக உள்ள போதிலும்
இனிவரும் காலங்களில் அது சாத்தியப்படலாம்
.
அப்படியான ஒரு சூழ்நிலை உருவாகும் போது
அவ்வரலாறுகளை வெளிக் கொண்டு வர விளையும்
சமகால
புத்திஜிவிகளிற்கு முன்பு கண்டறியப்பட்ட
சில தகவல்களைக் கடத்துவதே எனது நோக்கமாகும்.
இதில் வரும் எந்தக் தகவலும்
என்னால் கண்டறியப்பட்டவை அல்ல.
இதை
உனது சொந்தக் கட்டுரை என்பதை விட
பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும்
வெளிவந்த, பல்வேறு ஆசிரியர்களினதும்,
தொல்பொருள் ஆய்வாளர்களினதும் கட்டுரைகளின்
தொகுப்பு என்று சொல்வதே சரியாக
இருக்கும்.
வன்னி
மண் இன்று வடபுலத்தே ஆனையிறவையும் தென்புலத்தே
அனுராதபுரத்தையும் கிழக்கு மேற்குத்
திசைகளில் இந்து சமுத்திரத்தையும்
எல்லைகளாகக் கொண்ட நிலப் பரப்பாகச்
(வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்) சுருங்கி விட்ட
போதிலும், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும்
கண்டிக்கும்
இடையே உள்ள நாடு வன்னி வள நாடு
என வழங்கப்பட்டது. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு,
கொட்டியாரம், யால
பாலுகமும் மேற்கேயுள்ள புத்தளம்
முதலியனவும் முற்காலத்தில் வன்னி நாட்டைச்
சேர்ந்திருந்தன.
பின்னர் டச்சுக்காரர் காலத்தில்
வன்னியின் தெற்கு எல்லையாக அரிப்பு ஆறும்,
காலு ஆறும் இருந்தன. இப்படியாக, வளம் கொழித்து விளங்கிய
வன்னி நாடு இன்று தன் பெரும் பகுதியை காடுகளுக்குள் தொலைத்து விட்டு,
சோகங்களையே சொந்தமாக்கிக் கொண்டுள்ளது.
பட்டினிச் சாவுகளும் அங்கு பாதம் பதிக்கத்
தொடங்கி விட்டன.
ஆனால் ஈழத்தின் உணவுக் களஞ்சியம் எனப் போற்றப்படும்
செந்நெற் களனியாக
விளங்கிய வன்னி மண் மீண்டும் செழிக்க வேண்டும்.
முதற்கண்
வன்னி என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை
நோக்கி அப்பாற் செல்வது சிறப்பாக இருக்கும் என
நினைக்கிறேன்.
வன்னி
என்றால் நெருப்பு எவனும் பொருள் தமிழ்
இலக்கியங்களில் வழங்கி வருகிறது. எனவே வன்னியர்கள்
அக்கினி குலத்தின் வழிவந்தவர்கள் என்ற கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது.
அந்த வன்னியர்கள்
வாழ்ந்த, வாழ்கின்ற
மண் வன்னி என்றழைக்கப்பட்டது.
எவருக்கும் அடங்கிப் போகாத குணமும் இரத்தத்தில் ஊறிய வீரமும் கொண்டவர்கனே வன்னியர்களாவர்
இனி
வடக்கே யாழ்ப்பாண மன்னர்க்கோ தெற்கே
அனுராதபுர மன்னர்களான வன்னியர் தம் குடியிருப்புக்கள்
கட்டு
(இன்று முத்தையன் கட்டாக மருவி விட்டது) முன்பொரு
காலத்தில் இராசதானியாக விளங்கியதா
என்பதற்கு விடைகாண முனைந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். கே. இந்திரபால
தலைமையிலான குழுவினர் 1973ம் ஆண்டளவில் ஆராய்ச்சி மூலம் பெற்றுக் கொண்ட தொல்பொருள்
சான்றுகள் பற்றிப் பார்ப்போம்.
டாக்டர்.
கே. இந்திரபால, முள்ளியவளை ஆசிரியர் சி.
கன்னையன், வே. சுப்பிரமணியம்
(முல்லைமணி) க.கனகையா, மாமுலையைச் சேர்ந்த க.தவராசா ஊஞ்சாற் கட்டியைச்
சேர்ந்த சி. கணேசபிள்ளை,
கோரமோட்டையைச் சேர்ந்த க.ஜெயக்கொடி ஆகியோரைக்
கொண்ட குழுவினர், நெடுங்கேணி, பட்டாடை பிரிந்த
குளம், கோரமோட்டை,
வெடுக்கு நாறி மலை,
வெடிவிச்ச கல்லு, முத்தரையன் கட்டு ஆகிய இடங்களில்
அடர் காடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் சாசனங்கள், கட்டிட
அழிபாடுகள் ஆகியவற்றை ஆராய்ப்பட்டது. வெடிவிச்ச கல்லிலே பாறை ஒன்றில் பொறிக்கப்பட்டிருக்கும்
கி.பி முதலாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த சாசனம் ஒன்றும்
ஆராய்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் முற்பட்ட சாசனங்கள் வெடுக்கு நாறி
மலையிலுள்ள குகைகளில்
காணப்பட்டன.
இவை இரண்டாயிரத்து இருநு}று ஆண்டுகளிற்கு
முற்பட்டவை. இக்குகைகளில்
மூன்று கல்வெட்டுக்களும் காணப்பட்டன. முத்தரையன் கட்டிலே கி.பி ஒன்பதாம் நு}ற்றாண்டைக்
சேர்ந்த கல்வெட்டு ஒன்றும்
அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டது.|| எனவும்
கூறும் டாக்டர்.
இந்திரபால தாம் முத்தரையன் கட்டுக் காட்டில் கண்ட அரண்மனையைப் பற்றிப்
பின்வருமாறு விபரிக்கின்றார்.
~~முத்தரையன் கட்டியே ஆராயப்பட்ட கட்டிட
அழிபாடுகள் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தவையாகவும், வியப்ப10ட்டுவனவாகவும்,
காணப்பட்டன. அது ஒரு பெரிய அரண்மனை
கருங்கற்களினாலான் உயரமான சுற்று மதிலையும்
அதனைச் சுற்றி ஆழமான அகழியையும் கொண்ட
விசாலமான
அரண்மனையாக அது காணப்பட்டது.
அரண்மனை மத்தியில் நல்ல நிலையிலுள்ள சீராகச்
செதுக்கப்பட்ட
வாசல்கள் கதவுகள் காணப்பட்டன.
அத்துடன் மன்னர்கள் பயன்படுத்திய பெரிய கல்லாசனம் ஒன்றும்
உடையாது பேணப்பட்டு இருக்கின்றது.||
இந்த
அழிபாடுகளை நோக்குமிடத்து முத்தரையன்
கட்டு ஒரு காலத்தில் ஓர் இராசதானியாக விளங்கியிருக்க
வேண்டும் என்று கூறக் கூடியதாக உள்ளது. எனினும் அதன் பிறகு இது சம்பந்தமாக செய்திகள்
எதுவும்
வெளிவந்ததாகத் தெரியவில்லை. நாட்டுப்
பிரச்சினை காரணமாக அவ்வாராய்ச்சிகள்
தடைப்பட்டிருக்கலாம்.
இனி, வெட்டு
நாறி மலையில்
ஆராய்ச்சியை மேற்கொண்ட விதி துருவசங்கரி எனும் ஆராய்ச்சியாளர். எழுதியுள்ளதைப்
பார்ப்போம்.
அவர் அதை ஓர் நேரடி விபரிப்பாகத் தந்துள்ளார்.
அதனை சில சுருக்கங்களுடன்
தருகிறேன்.
~~பெரிய கல்லுருண்டைகள், அதனிடையே
படிகள் போன்று இயற்கையாக அமைந்த அமைப்புக்கள்
அதன் உதவியுடன் எட்டுப் பத்து அடிகள் ஏறியிருப்போட். எம் முன்னே மூன்று பெரியபாரிய
செவ்வக அமைப்புடைய கற்குற்றிகள், அவற்றில் இரண்டு
உயர்ந்து ஒன்றிற்கொன்று
சமாந்தரமாகவும்,
குறுகியது இவ்விரண்டையும் தொடுத்தாற் போல் குறுக்கே
செங்குத்தாக இருந்தது. அம்மாதிரியான பாரிய கற்கள்
அவ்வட்டாரத்தில் எவ்விடத்திலும் இல்லை.
குறுக்கே
கிடந்த கல் கிட்டத்தட்ட 40 அடிஅகலமும். 20 அடி உயரமும்
இருக்கும். அக்கல்லு
வழமையாக படம் எடுக்கும் நாகத்தின்
தலையைப் போல் குடையப் பெற்று மழையின் போது
வடிந்து
வரும் நீர் எங்கே குகைக்குள் போய்விடுமோ
என்ற அச்சத்தின் நிமித்தம் குகை வாசலைச் சுற்றி
விளிம்பு அமைக்கப்பட்டிருந்தது. குகை வாசலில் ஏதோ புரியாத எழுத்துக்கள்
, இவை எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு
என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக்
கொண்டு
என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக்களின்
மாதிரியை பதிவு செய்து கொண்டேன்.
பின்
நீண்ட ஒரு தடியினால் குகைச் சுவர் வழியாக அதன் அடியைக் கிண்டினேன். கூட வந்த எல்லோரும்
அதிசயித்தனர். அங்கே சலசலவென நீரின் சத்தம்.
திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்தேன்.
அது நீரினால் நனைந்திருந்தது. இப்போது புரிந்தது அது மழை நீரைச் சேமிப்பதற்கான அமைப்பு
என்று. கல்லில் விழும் மழைத்துளிகள் படமெடுத்த
பாம்பின் அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்டு
வடிந்து கீழே உள்ள நீர்த்தொட்டியில் சேமிக்கப்படுகிறது. அப்படியாயின் முன்பு கூறியது
என்ன?
விளிம்பு
அமைக்கப்பட்டு நீர் உள்ளே வடியாமல்
அமைக்கப்பட்டது. எப்படியாக முடியும்?
ரொம்ப நல்ல கேள்வி. நீங்களும் என்னுடன் சேர்ந்து
உசாராகிவிட்டீர்கள். பாறை
செவ்வகவடிவம்
அதன் மேற்பரப்பில் து}சு முதலியன அடைவதற்கு சாத்தியம்
உண்டு.
அங்கே
சில தாவரங்கள் கூட முளைத்திருக்கின்றன.
அதனைப் பின்னர் ஆராய்வோம். அப்படியாயின்
பாறை
உச்சியில் விழும் நீர் வடியும் போது மண்,
சருகுகள் போன்றவற்றை அள்ளி சேமிப்பறைக்குள்
கொண்டு வந்து சேர்த்து விடுமல்லாவா,
இதைத்
தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட
செங்குத்தாக அதாவது
து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிப்பறைக்குள்
கொண்டு வந்து
சேர்த்து விடுமல்லவா,
இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக
அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது
து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிக்கப்படுகிறது.
நில நீர் இல்லாத இடங்களில்,
ஆறு, குளங்கள் இல்லாத இடங்களில்
குடிநீரைச் சேமிக்கும்
பழக்கம் இலங்கை
ஆதிக்குடிகளிடம் இருந்திருக்கிறது என்பதில் எள்ளளவிலும் ஐயமில்லை.
பின்,
பாறையைச் சுற்றி வந்தோம் படமெடுக்கும்
நாகத்தின் தலையமைப்பைக் கொண்ட
குகையின் பின்புறத்தே பற்றுவாரிக்ள விடக்கூடிய தரைமேலே ஒரு பக்கம் திறந்த மண்டபம்.
பக்கவாட்டில் இருந்த ஒன்று
க்கொன்று சமாந்தரமாகக் கிடக்கும் செவ்வகப்
பாறைகள் உள்ளே
வளைந்து ஒன்றையொன்று முட்டத்துடித்துக் கொண்டிருந்தன.
மண்டபத்தினுள்
இருந்து மேலே அண்ணாந்துபார்த்தால் ஒன்று,
ஒன்றரையடி அகலத்தில் அறுபது அடி நீளத்தில் இரு சமாந்தரக் கோடுகளின் வழியாக
நீல வானம் தெரிந்தது. அப்போது மழை சற்று பலமாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. இருப்பினும்
எங்கள் மேனியில் ஒரு துளி கூட நீர் படவில்லை.
ஆனால் மழைநீர், வளைந்த கற்பாறைகளின் சுவர் வழியாக வழிந்து மண்டத்தின் தரையை அடைந்தது. எல்லாம்
ஒரே விந்தையாக இருந்தது.
மண்டபத்தின் மூடிய பகுதியில் தான் மூன்றாவது பாரிய கல் அடைத்துக்
கொண்டிருந்தது. அதன் மத்தியில் இருந்தது சற்று வலது
கைப்புறமாக இரண்டரை அடி விட்டத்தில்
சீரற்ற உருவில் வழி ஒன்று இருந்தது. அதனு}டே எட்டிப் பார்த்தேன். அங்கு இருட்டு
நிரம்பியிருந்தது. நீண்ட தடியை
அவ்வழியினு}டாக விட்டு உள்ளே சகல திசைகளிலும்
அசைத்துப் பார்த்தேன். உள்ளே எல்லாத்
திசைகளிலும் பத்து அடிக்கும் மேலாகவே
குகையின்
விஸ்தீரணம் இருந்தது. குகை தரைமட்டத்திற்கு
ஆயத்தமானார். ஆனால் நான் அவரைத் தடுத்து
விட்டேன்.
எங்களிடம்
டோர்ச் லைட்டோ, ஏன் கேவலம் ஒரு தீப்பந்தமோ
இருக்கவில்லை. இப்படியான குகைக்குள் காபனீரொட்சைட்டின்
செறிவு அதிகமாக இருக்கும். அது உயிராபத்தை விளைவிக்கக் கூடியது
எவ்வித தற்காப்பு வழிகளும்
இல்லாமல் இப்படியான
நடவடிக்கைகளில் ஈடுபடுவது அறிவற்ற செயலாகும்.
மண்டபத்திற்கு
வெளியே சிறிய கற்களால் ஓட்டுச்
சல்லிகளாலும் ஆன சிறிய மேடை அதை ஒரிரு
காட்டு மரங்கள்
ஆட்சி செய்து கொண்டிருந்தன.
அதில் குரங்குக் கூட்டங்கள் தாவி விளையாடிக்
கொண்டிருந்தன.
கீழே கரடி எச்சங்கள் மூக்கை
அரித்தது. ஆதிகாலமட்பாண்டத் துண்டுகள்
அங்கும் இங்குமாக
வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்தன. அவற்றைக் குழப்பவோ அன்றேல் கிண்டி எடுக்கவோ நான்
விரும்பவில்லை.
தகுந்த முறையில் புதைபொருளாய்வு
மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவோடு
அவ்விடத்தை விட்டு அகன்று,
மீண்டும் குகையின் முன்பக்கம்
வந்து ஆராய்ந்தோம். குகையின் இடப்புறத்தில்
அதாவது இரண்டு பாறைகள் சந்திக்கும் இடத்தில் இருந்த
இடைவெளியில் சிக்கிக் கிடந்த மண்ணில்
முளைத்து சிறு மரமாக காட்சியளித்துக்
கொண்டிருந்தது ஆலமரமொன்று.
அதன் வேர்கள் கல்லின்
இடுக்கின் ஊடாக தரையை
எட்டிப் பிடிக்க துடித்துக் கொண்டிருந்தது. அதனைப் பிடித்து ஏறி
நாம் எல்லோரும் பாறையின் உச்சியினை அடைந்தோம்.
அங்கே ஒரு பீடம், அப்பீடத்தின் வெடிப்புகளில்
ஓர் இரு நாகதாளி மரங்கள் ஆளவு உயரத்திற்கு
வளர்ந்திருந்தன.
அங்கே ஓர் பத்தடி உயரமுள்ள கற்று}ண் நிலைக்குத்தாக இருந்தது. இத்து}ணானது எதோடும்
பொருத்தப்படாமல் சுகந்திரமாக இருந்தது.
அத்து}ணில் எந்த விதமான குறியீடுகளும்
காணப்படாத
போதிலும், அவை எகிப்திய நாட்டில் காணப்படும் கற்று}ண்களை ஒத்திருந்தன.
இது மட்டுமல்ல அங்கே யாரோ விகாரை கட்ட எடுத்த முயற்சியை பறை
சாற்று முகமாக அண்மையில்
குவிக்கப்பட்ட சிறு
கற்களும் சலித்த மணல் குவியலும் விகாரையின்
கோபுரத்திற்கு தேவையான
வட்டக் கற்களும் கிடந்தன.
ஆத்திரம்
மீறிக் கொண்டு வந்தது. வெட்டி நாறி
மலையை,
வெட்டி நாறி விகாரையாக மாற்ற
யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர்.
அவ்வளவு து}ரம் மதவெறி இலங்கையரை
ஆட்டிப் படைக்கிறதா? வெட்டி நாறி மலையின்
மூன்று
பாறைகளும் மனிதனின் படைப்பல்ல!
இயற்கையாய் அமைந்தனவே. வடக்கு சமதரையின்
முடியில் இப்படியான
கனக்குற்றி வடிவில் கற்பாறைகள் உண்டு (மகா இலுப்பள்ளம்) இப்படி இயற்கையாக அமைந்த கோடிக்கணக்கான
ஆண்டுகள்
வயதுடைய இடங்கள் எப்படி பௌத்த சின்னமாக முடியும்?
இயற்கையான
அவ்விடத்தை ஆதிக் குடிகள், தமது இருப்பிடமாக்கிக் கொண்டார்கள்.
அங்கு எவ்வித மத வழிபாட்டுக்குரிய சின்னங்கள் கூட இல்லை.
அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகளின்
தெய்வவமாகப்
பகலில் தெரியும் சூரியன் விளங்கியிருக்கலாம்|| (சூரியனுக்கு
கோவில் கட்டி வழிபடும் வழக்கம் மிக அரிதாகவே பழங்குடிகளிடம் இருந்து வந்திருக்கின்றது
என்பதற்கு போதிய ஆதாரங்கள் உண்டு). என மேலும்
கட்டுரையை யாழ்ப்பாண தொல்பொருள்கள் நோக்கி
நகர்த்திச் செல்கிறார். ஆசிரியர். ஆனாலும் எனது கட்டுரைத் தலையங்கத்திற்கு உட்பட்டு
இத்துடன் அவர் கட்டுரையை நிறுத்திக் கொள்கிறேன்.
அடுத்து
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த
நெடுங்கேணியிலுள்ள வெடிவைத்த கல்லு (வெடிவிச்ச கல்லு)
என்னும் விவசாயத் குடிமக்கள் வாழ்கின்ற புராதன கிராமத்தில்
உள்ள ஆதி முத்துமாரியம்மன்
ஆலயத்தின்
பாழ்ங்கிணறு ஒன்றை ஆழமாக்க முற்பட்ட போது.
1980ம் ஆண்டளவில் பெரும் பிரியத்தனத்தின்
பின் வெளியே எடுக்கப்பட்ட இரண்டடி நீளமும் ஒன்றேமுக்கால் அடி அகலமும் உள்ள கல் உள்ளடக்கிய
ஒரு அடி உயரமான முத்துமாரியம்மனின்
பாதவிம்பம் பதிந்த, இயந்திரம் பொதித்த பாதார
விம்பம் மேலும் ஒரு வரலாறு சொல்லக் கூடிய தரும் பொருளாகத் திகழ்கிறது. இது வன்னியர்
ஆட்சிக் காலத்தில்
சிறப்புடன் மிளிர்ந்த ஆலயத்தினதாகும். இச்சிலை
அவ்வாலயத்திலேயே பிரதிஷ்டை
செய்யப்பட்டது.
இவை
யாவும் அறியப்பட்ட தொல்பொருட்களே
இவற்றை விடவும் வேறும் வரலாற்றுச் சான்றுகளாக விளங்கக்
கூடிய தொல்பொருட்கள் வன்னி மண்ணில் இருக்கலாம். அவையாவும் சமாதானம் ஏற்படும் ஒரு நாளில்
வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அவை மூலம் எமது வரலாற்றுப் பாதைகளிலுள்ள வெற்றிடங்கள்
நிரப்பப்பட வேண்டும்.
-சக்தி படையாட்சி
Comments
Post a Comment