பச்சை தமிழர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்

பச்சை தமிழர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்



தமிழ் நாட்டில் தமிழர்கள் யார் என்பதை "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" தான் சொல்லமுடியும் என்பதே சான்றுகளின் அடிப்படையில் உண்மையாகும். எங்களைவிட யார் தமிழின் மீது பெரும்பற்று வைத்திருக்கமுடியும் ? ஆனால் இன்று சிலர் வன்னியர்கள் தமிழர்களா ? என்ற கேள்வியை எழுப்புவது மிகப்பெரிய நகைச்சுவையாகும். பாவம் ஏதும் அறியாதவர்கள் அவர்கள்.


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி எங்கள் "வன்னிய குல க்ஷத்ரிய பெரும்குடி". சிலர் "க்ஷத்ரியர்" என்பதை சமஸ்கிருதம் என்று சொல்லுகிறார்கள். இருக்கட்டுமே, சங்ககாலத்திலேயே சமஸ்கிருதம் இருந்திருக்கிறது என்பது வரலாறாகும்.


மறைந்து போன சங்கத் தமிழ் நூல் "செயிற்றியம்" நால்வகை வருணநிலையைப் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. அதில் "அரசர் ஜாதி" என்று "க்ஷத்ரியர்களை" மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. எனவே இவை இரண்டும் ஒன்றேயாகும். சிலர் அரசர்களை மட்டுமே க்ஷத்ரியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் சோழர்கள் காலத்து திருவிந்தளூர் செப்பேடு "க்ஷத்ரிய சமூகத்து போர்வீரர்களை" பற்றியும் குறிப்பிடுகிறது. சோழ மன்னர்கள் செப்பேட்டில் சொன்னதை தான் நாங்கள் நம்புவோம். மற்றவர்கள் சொல்லும் பொய் கதைகளையெல்லாம் ஒருபோதும் நம்பமாட்டோம்.


மறைந்துபோன சங்கத் தமிழ் நூல் செயிற்றியம் மிக மிக தெளிவாக "அரசர் ஜாதி" என்று குறிப்பிடுவதால், மூவேந்தர்களும் மற்றும் வேளிர்களும் வன்னியர்களே என்பது உறுதியாகும். இதை சங்கத் தமிழ் புலவர் கபிலரும் புறம் பாடலில் குறிப்பிடுகிறார்கள்.


வேந்தர்களும் வேளிர்களும், தமிழுக்கும் தமிழர்களது பண்பாட்டுக்கும் செய்யாத சாதனையா மற்றவர்கள் செய்துவிட்டார்கள். எங்கள் பள்ளி குல மழவர் பெருமகன் அதியமான், தமிழ் நீடுழி வாழவேண்டும் என்று கருதி தனக்கு கிடைத்த அறிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் புலவருக்கு கொடுத்தார்கள்.


மிகவும் புனிதமாக கருதப்பட்ட சேர அரசனின் முரசுவைக்கும் "பள்ளி கட்டிலில்", தமிழ்புலவர் மோசிகீரனார் உறங்கிவிட்டார். இதனை அறிந்த மற்றவர்கள் புலவரின் மரணம் உறுதி என்று கருதிவிட்ட நிலையில், அங்கு வந்த "அக்னி குல சேரமன்னன்", புலவரின் தூக்கம் பாதிப்படையக் கூடாது என்பதற்காக "தானே கவரியை எடுத்து புலவருக்கு வீசினான்". பள்ளி குல சேரமன்னன் "தமிழுக்கு கவரிவீசினான்" என்பது வரலாறு.


சம்புவராயர்களின் முன்னோனான, கிடங்கில் கோமான் ஓய்மான் நல்லியக்கோடன், தனது அரண்மனையின் வாயிற்கதவை எப்போதும் புலவர்களுக்கும் பாணர்களுக்கும் திறந்துவைத்தான். ஆனால் அவனது கோட்டை (திண்டிவனம் பேரூந்துநிலையம் மிக அருகில்) இன்று பஞ்சம்பிழைக்க வந்தவர்களால் அக்கிரமிக்கப்பட்டு பாழாய் கிடக்கிறது.


பல்லவ வேந்தன் "நந்திவர்ம பல்லவன்" தமிழுக்காக தனது உயிரையே கொடுத்தான் என்று "நந்தி கலம்பகம்" குறிப்பிடுகிறது. நந்திவர்ம பல்லவனின் வாரிசுகளான காடவராயர்கள், சோழர்கள் காலத்தில் "தமிழ்நாடு காத்த பெருமான்" என்றும் "பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவன்" என்றும் போற்றப்பட்டார்கள்.


அண்மைக்காலம் வரைக்கும் தமிழ் புலவர்களான, "கணம் கிருஷ்ண ஐயர்", "அந்தகக்கவி வீரராகவ முதலியார்", "சுப்ரதீப கவிராயர்", "உ.வே.சாமிநாத ஐயர்" போன்றோர்களை ஆதரித்தது எங்களது "அரியலூர் அரசர்களும்" மற்றும் "உடையார் பாளையம் அரசர்கள்" மட்டுமே ஆகும். இதை தமிழக தொல்லியல் துறை நூலான "தமிழ் கீர்த்தனைகள்" என்ற நூல் குறிப்பிடுகிறது.


சங்கத் தமிழ் மன்னனான கரிகால் சோழனின் வழிவந்தவர்களான "பச்சை தமிழர்களான தெலுங்கு சோழர்கள்", ஆந்திரப்பகுதியில் தங்களது ஆட்சியை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே செலுத்தினார்கள். அவர்கள் காலத்தின் கோலத்தால் "தெலுங்கு மொழி பேசுபவர்களாக மாறிவிட்டாலும்" அவர்களை நாங்கள் "பச்சை தமிழர்களாகவே" கருதுகிறோம். இதைப்போலவே பண்டைய பச்சை தமிழர்களான சாளுக்கியர்களையும். இவர்கள் வன்னியர்கள் என்பதால், நாங்கள் அவர்களை வரலாற்று ரீதியாக போற்றுகிறோம்.



எங்களது வரலாறு சென்ற இரண்டு நூற்றாண்டுகளாக முற்றிலுமாக மறைக்கப்பட்டுவிட்டது. அதற்காகவே நாங்கள் எங்களது சமூக வரலாற்றை உயர்த்திப்பிடிக்கிறோம்.

Comments

Popular posts from this blog

வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்

சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு

வீர வன்னியர்குல சத்திரியர்கள்