வன்னிய குல ஷத்திரிய மஹா சங்கம்

வன்னிய குல ஷத்திரிய மஹா சங்கம்

கி.பி 1886 ல் இந்தியாவிலேயே முதல் முதலாக வன்னிய குல ஷத்திரிய மஹா சங்கம் என்று ஒரு சாதி சங்கத்தை மதராஸ் பிரசிடன்சியில் தோற்றுவித்த மகான் ஸ்ரீ கா.கோபால் நாயகர் அவர்கள்.


ஆங்கிலேய கைக்கூலிகள் வன்னியர்ககளை "பள்ளி " என்று இழிவுபடுத்தியபோது பள்ளி என்பது இழிவான சொல் அல்ல வன்னிய அரசர்கள் சமண துறவிகளுக்கு நிலம் வழங்கியதை சமணப் பள்ளி, மடப் பள்ளி என்று வழங்கப்பட்டன இதன் காரனமாக பின்னாளில் வன்னிய மன்னர்களின் வழித்தோன்றல்களுக்கு இப்பெயர் நிலைத்தது.அது உயர்வான சொல்லே என்று
வ கு ஷ அதிகாரப்பூர்வ பத்திரிக்கைகளான வன்னியகுலாதித்தன், அக்னிகுல மித்ரன் உள்ளிட்ட இதழ்களின் மூலமாக விளக்கங்கள் பல தந்தார்.


இன்று நாம் ஷத்திரியன் என்று காலரை தூக்கிவிட்டு கெத்தாக நெஞ்சை நிமர்த்தி நடக்க காரணமானவர்களில் இவர் முக்கியமானவர்.
வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை வன்னியகுல ஷத்திரியர் எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து வன்னியர்கள் ஷத்திரியர் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள்.


பின்பு நாங்களும் ஷத்திரியர்தான் என்று சில சாதிகள் உரிமைகொண்டாடின இவர்களின் வழக்கை தள்ளுபடி செய்த பிரிட்டிஷ் அரசு தென் இந்தியாவில் வன்னியர் மட்டுமே ஷத்திரியர் என அரசாணை எண் 26 கெசட்டலும் வெளியிட்டனர்.
வன்னிய குல க்ஷத்ரியர்" என்ற நம் பெயரை பெறுவதற்கே 60 ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதை இன்றைய இளைய தலை முறை அறிந்து கொள்ள வேண்டும்


நம் சமுதாயத்திற்கு க்ஷத்ரியர் என்ற சாதரணமாக கிடைத்து விட வில்லை கிட்ட தட்ட பல ஆயிரம் காலமாக ஆண்ட பரம்பரையில் கல்வி ,பொருளாதாரம் ,ஆட்சியில் இருந்து வந்த நாம் இடைப்பட்ட கால படையெடுப்பு களில் ஆட்சி அதிகாரத்தை இழந்ததனால் நம் வரலாற்றை, கல்வி தொலைத்து 600 ஆண்டுகள் ஆகி அனைத்திலும் ஏழ்மை நிலைக்கு தள்ள பட்டோம் , வன்னி நாடு பல மரபார் ஆட்சிக்கு உட்பட்டு கடைசியாக வந்த ஆங்கிலேயன் நம்மை கீழ் ஜாதி வரிசையில் 8 வது இடத்தில பள்ளி என்று நம்மை இணைக்க பார்த்த பொது கொதித்து எழுந்தனர் நம் சமூகம் எங்களை வன்னிய குல க்ஷத்ரியர் என்ற குறிக்க வேண்டும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்ப அதிகாரியிடம் முறையிட்டு நாடு முழுதும் போராட்டங்களும் , ஆர்பாட்டங்களும் வெடித்தன .


அப்போது ஆங்கிலேயர்கள் கேள்வி
ஒரு சமுதாயத்திற்கு அல்லது சாதிக்கு உயருந்த அரச மரபினர் என்ற பெருமை இருந்தால் அதற்கு ஆதாரங்கள் இருக்கும் இலக்கிய ,இதிகாச ,புராண, சரித்திர கல்வெட்டு , சிலசசான, தாமிர பட்டய சான்று பள்ளிகலான உங்களுக்கு உள்ளதா? இருந்தால் கொண்டு வாருங்கள் உங்களுக்கு " க்ஷத்ரியர்" என்று அரசு கணக்கெடுப்பில் குறிப்பிடுகிறோம் என்றனர் .


சான்றுகள் தேடுதல்
இப்போதே கல்வி அறிவு குறைந்து உள்ள நம் சமூகம் 1871 இல் எப்படி இருந்து இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தல் வேதனை தான் மிஞ்சும் 5 சதவீதத்திற்கும் குறைவான கற்றவர்கள் ,பட்டம் பெற்றவர்கள் ,வழக்குறிஞ்சர்கள், எல்லாம் தேட தொடங்கினர்

குன்னம் முனுசாமி பிள்ளை பிள்ளை என்பது வன்னியர்களின் பட்டங்களில் ஒன்று திருச்சி ,புதுகோட்டை நம் மக்கள் பிள்ளை என்ற பட்டதுடன் ஜம்பு மக ரிஷி கோத்திரத்தில் வாழுந்து வருகிறார்கள் . 1872 ஆம் ஆண்டு குன்னம் முனுசாமி பிள்ளை என்ற உறவினர் " ஜாதி சங்கிரச்சரம் " என்ற நூலில் வன்னியர்களை பற்றி விரிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது .

காஞ்சிபுரம் ஆறுமுக நாயகர் 1907 இல் " சாதி கண்ணாடி " என்று பொருள் படும் " வருண தருப்பணம் " எனும் நூலை வெளியிட்டார் . முனுசாமி நாயகர் வன்னிய குல க்ஷத்ரிய மகா சங்கத்தின் ஆய்வாளராக செயல்பட்டார் .

கா. அண்ணாசாமி நாயகர் " வன்னிய குல விளக்கம் " என்ற நூலை தமிழ் ,தெலுங்கு ,ஆங்கிலம் , மூன்று மொழிகளில் வெளியிட்டார் பல்வேறு இலங்கியங்களில் வன்னியர்களை பற்றிய குறிப்புகளும் ,கல்வெட்டு செய்திகளையும் ,வட மொழி சூத்திரங்களையும் , தாமிர செப்பேடு செய்திகளையும் பல ஊருகளுக்கு சென்று அலைந்து திருந்து சேகரித்து புத்தகமா அச்சிட்டார் . சென்னை மாநில கல்லூரி சம்ஸ்கிருத பேராசிரியர்களை கொண்டு அவைகள் உண்மையானவை என்று சான்றுகள் பெற்று இணைத்து உள்ளனர் சுமார் 15 -20 ஆண்டுகள் தன வக்கீல் தொழிலை விட்டு அலைந்து திரிந்து உருவாக்கிய இந்த நூல் நமக்கு தக்க ஆதரமாக விளங்கியது

EDWARD THURSTON என்பவர் தென் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக வந்தார் தமது ஆய்வை CASTES AND TRIBES OF SOUTH INDIA என்ற நூல் வடிவில் அரசுக்கு சமர்பித்தார் அந்த நூலில் நம்மை பற்றிய செய்திகளும் தொகுத்து வழங்க பட்டது

அரசு முடிவு
பல்வேறு நூல்கள் வடிவில் சமர்பிக்க பட்ட சான்றுகளை சரி பார்த்த ஆங்கில அரசு இறுதியில் நமக்கு " வன்னிய குல க்ஷத்ரியர் " என்று ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என்று அறிவித்தது . எல்லா ஆவணங்களிலும் " வன்னிய குல க்ஷத்ரியர் என்று குறிப்பிட வேண்டும் என்று அரசானை வெளியிட்டது .

தெலுங்கு வன்னியர்
அன்று சீமந்திர பகுதி தமிழகத்துடன் இனைந்து இருந்த பகுதி அங்கு நம் மக்கள் அதிக அளவில் வசிகின்றனர் , அவர்கள் தங்களை அக்னி குல க்ஷத்ரியர் என்கின்றனர் .மேலும் கோலார், பெங்களுர் , மைசூர் , கேரளா பகுதிகளில் வாழும் வன்னியர்கள் தங்களை திகளர் மற்றும் சம்பு குல க்ஷத்ரியர்கள் என்கின்றனர் .

அரசனை வெளியீடு

1929 ஆம் ஆண்டு ஜூன் 13 சென்னை மாகான சட்ட துறை மூலம் அரசனை எண ;271 இல் தமிழ்நாட்டில் வன்னிய குல க்ஷத்ரியர் என்றும் .தெலுங்கு பேசும் ஆந்திரா பகுதியில் அக்னி குல க்ஷத்ரியர் என்றும் குறிபிடபடுவர் என்று அரசு அறிவித்தது . சுமார் 60 ஆண்டுகள் போராடி இந்த பெயர்களை பெற்றுள்ளோம்

Comments

Post a Comment

Popular posts from this blog

வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்

சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு

வீர வன்னியர்குல சத்திரியர்கள்